புதுச்சேரி:அமைதி நிலவும் புதுச்சேரி மாநிலத்தில், கொலை, கொள்ளைகளை அரசியல் கட்சியினர் ஊக்குவிப்பதாக முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;புதுச்சேரியில் கொரோனா தொற்று, அனைவரின் கூட்டு முயற்சியால், குறைந்துள்ளது.இருப்பினும் மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். மீண்டும் கொரோனா பரவ துவங்கினால், மாநிலம் தாங்காது. கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கும்.காங்., பொதுச்செயலர் ஆறுமுகம், தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின் மிகப் பெரிய சதி உள்ளது. அதன் பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் விரோதம், குரோதம் இருக்க கூடாது.அமைதி நிலவும் புதுச்சேரி மாநிலத்தில், கொலை, கொள்ளைகளை அரசியல் கட்சியினர் ஊக்குவிக்கின்றனர்.ரங்கசாமி முதல்வராக இருந்தபோது, புதுச்சேரியில் சகஜமாக கொலைகள் நடந்தது. ரங்கசாமி முதல்வராக இருந்தபோது, சட்டசபையிலே ரவுடி இருப்பர். ரவுடிகளை அவர் ஊக்குவித்தார். கொலை குற்றம் செய்பவர்களை தனிப்பட்ட முறையில் வளர்த்தார். அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.தனியார் மருத்துவ கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 50 சதவீத இடங்களை அரசுக்கு பெற, சட்ட வரையறை தயார் செய்து, அமைச்சரவையில் முடிவு செய்து, மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பி உள்ளோம். ஒப்புதல் கிடைத்ததும் , சட்டசபையில் சட்டமாக நிறைவேற்றுவோம்.புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால், மத்திய அரசு, ஜனாதிபதியின் அனுமதி பெற்று தான், சட்டத்தை சட்டசபையில் கொண்டு வர முடியும். அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம்.சிலர் விபரம் தெரியாமல், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவில்லை என தவறான தகவல்கள் பரப்புகின்றனர். மத்திய அரசுக்கு அனுப்பிய கோப்பு வந்தவுடன், சட்டசபையில் சட்டமாக நிறைவேற்றுவோம்.மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கோப்பிற்கு, அடுத்த வாரம் மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளிக்கும் என தெரிவித்தார்.
Advertisement